Home நாடு குறைகள் சரி செய்யப்பட்டால் கேஎல்ஐஏ 2 -விற்கு இடமாற்றம் – ஏர் ஏசியா முடிவு!

குறைகள் சரி செய்யப்பட்டால் கேஎல்ஐஏ 2 -விற்கு இடமாற்றம் – ஏர் ஏசியா முடிவு!

554
0
SHARE
Ad

airasiaகோலாலம்பூர், ஏப்ரல் 10 – குறைகள் சரி செய்யப்படும் பட்சத்தில், ஏர் ஏசியா புதிதாகத் திறக்கப்படவுள்ள கேஎல்ஐஏ 2 விமான நிலையத்திற்கு தனது இயக்கங்கள் அனைத்தையும் மாற்றிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் கமாருடின் மெரானுன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “எல்லா பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டால் நாங்கள் கேஎல்ஐஏ 2 விமான நிலையத்திற்கு இயக்கங்களை மாற்றிக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

வரும் மே 9 ஆம் தேதியோடு செப்பாங்கிலுள்ள குறைந்த கட்டண விமான நிலையம் (எல்சிசிடி) மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி துணை போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அஸீஸ் கப்ராவி அறிவித்தார்.

#TamilSchoolmychoice

அவரது அறிவிப்பையடுத்து, கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் சில குறைகள் உள்ளன. எனவே ஏர்ஏசியா தொடர்ந்து எல்சிசிடி-லேயே செயல்படும் என்று ஏர் ஏசியா அறிவிப்பு விடுத்தது.

இதனால், இவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப் துன் ரசாக் தலையிட்டு, புதிய விமான நிலையத்தில் உள்ள குறைகள் குறித்து அதிகாரிகள் கவனிப்பார்கள் என்றும், ஏர் ஏசியாவை கேஎல்ஐஏ 2 விமான நிலையத்திற்கு மாற்றிக் கொள்ளும் படியும் சமரசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.