Home படிக்க வேண்டும் 2 ஏர் ஏசியா விமானங்களில் இனி பறந்து கொண்டே ‘டுவிட்’ செய்யலாம்!

ஏர் ஏசியா விமானங்களில் இனி பறந்து கொண்டே ‘டுவிட்’ செய்யலாம்!

683
0
SHARE
Ad

Low_twitter150701கோலாலம்பூர், ஜூலை 3 – ஏர் ஏசியா நிறுவனம், ‘ரோக்கி’ (roKKi) நிறுவனத்துடன் சேர்ந்து தனது விமானங்களில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

கடந்த நவம்பர் மாதமே தங்கள் விமானங்களில்  வைஃபை வசதியை ஏற்படுத்திய ஏர் ஏசியா நிறுவனம், அதனை மேலும் மேம்படுத்தும் விதமாக ரோக்கி நிறுவனத்துடன் இணைந்து விமானங்களில் டுவிட்டர் வசதியை உருவாக்கி உள்ளது. இதன் மூலம், பயணிகள் இனி பல்லாயிரம் அடி உயரே பறந்து கொண்டிருந்தாலும், சமூக ஊடகங்களுடன் இணைந்தே இருக்க முடியும்.

இந்த வசதியை, ஏர் ஏசியா தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் ஏர் ஏசியா விமானம் AK5208-ல் தொடங்கி வைத்தார். அவர் சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் தனது முதல் டுவிட்டைப் பதிவு செய்தார். இந்த வசதி விரைவில் ஏர் ஏசியாவின் அனைத்து விமானங்களிலும் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

‘இன்ஸ்டன்ட் மெஸ்ஸேஜிங்’ (Instant Messaging) தொகுப்பாக உள்ள இந்த வசதியில் 3எம்பி டேட்டாவிற்கு 9 ரிங்கிட் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் டுவிட்டர் மட்டுமல்லாமல், வாட்ஸ்ஆப், வீசேட் உள்ளிட்ட மற்ற செயலிகளின் பயன்பாடுகளும் உள்ளன.

ஏர் ஏசியாவில் டுவிட்டர் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள தெற்காசியாவின் டுவிட்டர் நிர்வாக இயக்குனர் அரவிந்தர் குஜ்ரால், “இனி தரையில் மட்டுமல்ல, ஆகாயத்திலும் எங்கள் சேவை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.