Home உலகம் டிரான்ஸ் ஆசியா விபத்து: தவறுதலாக விமானத்தின் எஞ்சினை நிறுத்திய விமானி!

டிரான்ஸ் ஆசியா விபத்து: தவறுதலாக விமானத்தின் எஞ்சினை நிறுத்திய விமானி!

531
0
SHARE
Ad

transasia-airways-crash_650x400_81423023572தைபே, ஜூலை 3 – கடந்த பிப்ரவரி மாதம், டிரான்ஸ் ஆசியா ஜிஇ235 விமானம் தைவானில், ஆற்றில் விழுந்து நொறுங்கி, 43 பயணிகள் இறப்பிற்குக் காரணமாக அமைந்த சம்பவத்திற்கு, விமானியின் தவறான இயக்கம் தான் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

“ஐயோ.. தவறாகக் கருவியை நிறுத்திவிட்டேனே” என்பது தான் விமானம் விபத்திற்குள்ளான சில நொடிகளுக்கு முன் விமானி பேசிய கடைசி வார்த்தைகள் ஆகும்.

நேற்று தைவான் வான் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், “விமானம் புறப்பட்டு 365 மீட்டர் உயரத்திற்குச் சென்ற போது, விமானத்தின் இரண்டாவது எஞ்சினில் ‘புறப்பட்ட நேரத்தில் தீப்பற்றியதாக’ எச்சரிக்கை ஒலி வந்துள்ளது.”

#TamilSchoolmychoice

“அந்த நேரத்தில் தலைமை விமானி முதல் எஞ்சினின் இயக்கத்தை நிறுத்தியுள்ளார். இதனால் விமானத்தின் இரண்டு எஞ்சின்களும் நிறுத்தப்பட்டு விமானம் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. விமானம் விழுந்து நொறுங்கும் கடைசி நிமிடங்களில் விமானிகள் எஞ்சினை மீண்டும் இயக்க முயற்சி செய்துள்ளனர்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தைவானின் தலைநகரான தைப்பேயில் கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, 53 பயணிகள் மற்றும் 5 விமானப் பணியாளர்களுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஆசியா விமானம் பாலம் ஒன்றில் மோதி, அருகே இருந்த கீலூங் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவத்தில் 43 பயணிகள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.