Home இந்தியா நட்பு ஊடகங்களில் சொற்போரைத் தவிருங்கள்- பிரதமர் மோடி அறிவுரை!

நட்பு ஊடகங்களில் சொற்போரைத் தவிருங்கள்- பிரதமர் மோடி அறிவுரை!

619
0
SHARE
Ad

modi00110-600புதுடெல்லி, ஜூலை 3-நட்பு ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்கள், கடுமையான விமர்சனங்கள் போன்றவற்றிற்கு நாமும் அதே பாணியில் பதிலளிக்க வேண்டாம் என்று  பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஒன்றைத் தனது வீட்டில் நடத்தினார். அதில், மத்திய அரசுக்குப் பொதுமக்கள் யோசனை தெரிவிப்பதற்காகத் தொடங்கப்பட்ட எமது அரசு (மை கவர்ன்மெண்ட்) வலைதளத்தில் அடிக்கடி கருத்துத் தெரிவிப்பவர்கள் மற்றும் நட்பு ஊடக ஆர்வலர்கள் என மொத்தம் 125 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது  பிரதமர் மோடி அவர்களிடம் பேசியதாவது:–

#TamilSchoolmychoice

“நட்பு ஊடகங்களில் சிலர் அடைமழையெனப் பொழிந்து வரும் வசை மொழிகள், எதிர்மறைக் கருத்துகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பதிலுக்கு நாமும் அதேபோல் பதிலளித்தால் எதிர்காலத்தில் நட்பு ஊடகங்களே அழிந்து போகும்.

எல்லோரும் எதிர்மறையான கருத்துக்களைத் தவிர்த்து, நேர்மறை கருத்துகளைத் தெரிவிக்கலாமே?

நட்பு ஊடகங்களில் நான் வாங்கிய திட்டுகள் ஏராளம். அந்த வசை மொழிகளை அச்சிட்டால், அந்தக் காகிதம், தாஜ்மகால் முழுவதையும் மூடி விடும். அவ்வளவு இருக்கிறது. ஆனாலும், என்னைத் திட்டுபவர்களை நான் முடக்கியது இல்லை.

நட்பு ஊடகங்களில் நேர்மறைக் கருத்துகள் மற்றும் படைப்புத்திறனைப் பயன்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் உதவுங்கள்”என்றார்.

மேலும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான “மை கவர்மெண்ட்ஸ்’ வாயிலாகத் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஆலோசனைகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்காகக் கலந்துரையாடலில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.