Home நாடு 1எம்டிபி விவகாரம்:பிரதமரின் தனிக்கணக்கில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதா?

1எம்டிபி விவகாரம்:பிரதமரின் தனிக்கணக்கில் பல மில்லியன் டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதா?

763
0
SHARE
Ad

najib-razakகோலாலம்பூர், ஜூலை 3 – 1எம்டிபி குறித்த விசாரணையில், திடுக்கிடும் திருப்பமாக 700 மில்லியன் ரிங்கிட், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிக்கணக்கில் போடப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இந்தத் தகவல்களை மலேசியப் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், “புலனாய்வாளர்களின் விசாரணைப் படி, 1எம்டிபியின் பணம், பல்வேறு அரசு முகமைகள், வங்கிகள் மற்றும் நிறுவனங்களைத் தாண்டி இறுதியாக நஜிப்பின் தனித்த வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்துள்ளது. வங்கி பரிவர்த்தனைப் படிவம் மற்றும் சில ஆவணங்களைப் பார்க்கையில் பரிமாற்றம் யார் யார் கணக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது” என்று தெரிவித்துள்ளது.

unnamed  வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியிட்டுள்ள ஆவணம்

#TamilSchoolmychoice

இதற்கிடையே, சரவாக் ரிப்போர்ட் வெளியிட்டுள்ள செய்தியில், “2.6 பில்லியன் ரிங்கிட், அபு தாபி ஃபண்ட அபார் கணக்குகளில் இருந்து நஜிப்பின் ‘ஆம்பேங்க்’ (AmBank) கணக்கிற்கு கடந்த மார்ச் மாதம் 2013-ம் தேதி மாற்றப்பட்டது. இந்தத் தேதி மலேசியப் பொதுத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்னால் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது” என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், “எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் பெர்ஹாட் நிறுவனம் 1 எம்டிபி நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் மற்றொரு நிறுவனத்திற்கு 42 மில்லியன் ரிங்கிட்டைப் பரிமாற்றம் செய்துள்ளது. தற்போது அந்நிறுவனம் மலேசிய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. நிதி அமைச்சகத்தை நஜிப் தான் நிர்வகிக்கிறார்.  இதில் மற்றொரு அதிர்ச்சி  என்னவென்றால், எஸ்ஆர்சி நிறுவனம் வழங்கிய பணம், மூத்த அரசு ஊழியர்களின் பொது ஓய்வூதிய நிதி (KWAP) ஆகும்” என்றும் சரவாக் ரிப்போர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கைகளின் குற்றச்சாட்டு பற்றிப் பெயர் வெளியிட விரும்பாத அரசுச் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “1எம்டிபி குறித்துப் பிரதமர் நஜிப் மீது வெளியாகி உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை. மக்கள் மத்தியில் பிரதமரின்  நற்பெயரைக் கலங்கப்படுத்துவதற்காக இவ்வகையான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் பரப்பி வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

நடுநிலையாளர்கள் இதுகுறித்து கூறுகையில், “பிரதமர் மீது நேரடியாக எழுப்பப்பட்டுள்ள இவ்வகைப் புகார்களுக்குப் பிறகும் அவர் மௌனமாக இருக்கக் கூடாது”என்று தெரிவித்துள்ளனர்.