Home நாடு வெள்ளம் : அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரிப்பு

வெள்ளம் : அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரிப்பு

831
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 18) தொடங்கி ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கிடையில், அரசாங்கம் மீதான சமூக ஊடகச் சாடல்கள் அதிகரித்து வருகின்றன.

வெள்ளம் வடியத் தொடங்கி விட்டாலும், அரசாங்க அமைப்புகள் மீதான கண்டனங்கள் குறைந்தபாடில்லை. குறிப்பாக சிலாங்கூரில் மத்திய அரசாங்க இலாகாக்கள் மெத்தனமாக நடந்து கொண்டவிதம் கடுமையான சாடல்களைத் தோற்றுவித்திருக்கிறது.

இஸ்மாயில் சாப்ரி அரசாங்கம் இந்த வெள்ளத்தின் மூலம் கூடுதல் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அதைத் தவற விட்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் மலேசிய தொடர்பு பல்ஊடக ஆணையம் அரசாங்கத்திற்கு எதிரான இணையவழிச் சாடல்களை அகற்றுவதற்கு முனைந்திருக்கிறது. டுவிட்டர் தளத்தில் அரசாங்கத்திற்கு எதிரான சாடல்களை அகற்ற தொடர்பு பல்ஊடக ஆணையம்
டுவிட்டர் நிருவாகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால், டுவிட்டர் அந்த உத்தரவைப் பின்பற்ற முடியாது என மறுத்துவிட்டது.