Home வணிகம்/தொழில் நுட்பம் டுவிட்டர் மூலம் இனி வருமானம் ஈட்டலாம்

டுவிட்டர் மூலம் இனி வருமானம் ஈட்டலாம்

638
0
SHARE
Ad

உலகின் மிக முக்கியமான சமூக ஊடகங்களில் ஒன்று டுவிட்டர். தினமும் கோடிக்கணக்கானோர் இந்தத் தளத்தைப் பின்தொடர்கின்றனர். உலகின் எல்லா பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் டுவிட்டர் பக்கம் என்ற ஒன்று உண்டு.

அவர்களை மில்லியன் கணக்கானோர் டுவிட்டர் வழி பின்தொடர்வதும் வழக்கமான ஒன்றாகும்.

இனி அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டிருக்கும் டுவிட்டர் தளங்கள் மூலம் வருமானம் ஈட்டும் திட்டம் ஒன்றை டுவிட்டர் நிறுவனம் விரைவில் செயல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

ஒரு குறிப்பிட்ட டுவிட்டர் தளத்தின் உள்ளடக்கத்தை விரும்புபவர்கள், அது பயனானது எனக் கருதுபவர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு தொகையை அந்தத் தளத்துக்கு வங்கிக் கணக்கு மூலம் சன்மானமாகச் செலுத்தலாம்.

இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை டுவிட்டர் இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் இது தொடர்பான விளக்கங்கள், இணையத் தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.