Home வாழ் நலம் இருமலை விரட்ட சில வழிகள்!

இருமலை விரட்ட சில வழிகள்!

708
0
SHARE
Ad

24-1390544438-1-coughஏப்ரல் 12 – இன்றையக் காலக்கட்டத்தில் இருமல் ஒரு பெரும் வியாதியாக உள்ளது. இருமலை விரட்ட ஆடுதொடா இலையின் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும். மேலும், இன்புறா, வல்லாரையைக் கசாயம் செய்து சாப்பிடலாம்.

இருமலை விரட்ட சில வழிகள்!

* விஷ்ணு கிரந்திப் பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

#TamilSchoolmychoice

* வெந்தயக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வரலாம்.

* சிறு குறிஞ்சா வேரைப் பொடி செய்து கசாயம் வைத்துச் சாப்பிடலாம்.

* முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.

* சீரகத்தைப் பொன் வறுவலாக வறுத்துப் பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.

* சிறுதேள் கொடுக்கு இலை, மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் சாப்பிட்டு வரலாம்.

* இஞ்சிச் சாறு, மாதுளம் சாற்றுடன் தேன் கலந்து அருந்தலாம்.

* மிளகுடன் பொரிகடலை சேர்த்துப் பொடியாக்கி ஒரு ஸ்பூன் வீதம் மூன்று வேளை உண்ணலாம்.

* ஓமவல்லி இலைச்சாற்றுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கான சீதள இருமலுக்குக் கொடுக்கலாம்.

* கண்டங்கத்தரி வேர், ஆடுதொடா வேர், திப்பிலி இம்மூன்றையும் கசாயம் செய்து 50மி.லி. வீதம் காலை மாலை குடிக்கலாம்.

* மாதுளம்பூவின் பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரலாம்.

* கடுகை மைய இடித்துத் தூள் செய்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம். 292359_3796059577246_1727000948_n-1

* கஞ்சாங்கோரை இலைச்சாற்றை 20 துளி அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

* நஞ்சறுப்பான் இலைச்சூரணம் ஒரு தேக்கரண்டி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கக்குவான் இருமல் காணாமல் போகும்.

* கொன்றைவேர்ப்பட்டை, தூதுவளைப்பொடி கலந்து சாப்பிட்டால் இரைப்பிருமலை விரட்டலாம்.

* சோடா உப்பைத் தண்ணீரில் கலந்து குடித்தால் கக்குவான் இருமலின் வேகத்தைக் குறைக்கலாம்.

* செந்நாயுறுவி வேர்ப்பட்டைப் பொடியுடன் தேனில் மிளகுப் பொடியும் சிறிது கலந்து குழைத்துக் காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.

* பிரமிய வழுக்கை இலையை அரைத்து மார்பில் துணியால் கட்டிக் கொண்டு வந்தால் சளி மிகுதியால் வரும் இருமலை விரட்டலாம்.

* முசுமுசுக்கை இலைப்பொடி, தூதுவளைப் பொடியுடன் கருவேலம் பிசின் கலந்து வெண்ணெய்யில் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம். நாள்பட்ட இளைப்பிருமல் தீரும்.