Home உலகம் நேபாளத்தில் போர் குற்றம் புரிந்தோருக்கு பொது மன்னிப்பு!

நேபாளத்தில் போர் குற்றம் புரிந்தோருக்கு பொது மன்னிப்பு!

494
0
SHARE
Ad

140227131446_ukraine_crimea_640x360_bbc_nocreditஏப்ரல் 12 – நேபாளத்தில் போர் குற்றம் புரிந்தோருக்கு பொது மன்னிப்பு அளிப்பதற்கான தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நேபாளத்தில் உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றத்தில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பு அளிப்பதற்கான தீர்மானத்தை அந்நாட்டு அரசு, கடந்த புதன் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது.

ஆனால் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேபாள காங்கிரஸ் கட்சி எம்.பி. ரமேஷ் லெகாக் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“பாலியல் பலாத்காரம் தவிர ஏனைய குற்றங்களில் ஈடுபட்ட மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பு வழங்க ஆணையம் அமைக்கப்படும். அந்த அமைப்பினர் அதன் ஆக்கக் கூறுகளை தீவிரமா ஆராய்ந்து பொது மன்னிப்பு வழங்குவர்” என்று கூறியுள்ளார்.

நேபாளத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த உள்நாட்டுப்போரில் சுமார் 16,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.