Home வணிகம்/தொழில் நுட்பம் கின்னஸ் பெர்ஹாட்டில் கிரின் இச்சிபான் பீர் விற்பனை!

கின்னஸ் பெர்ஹாட்டில் கிரின் இச்சிபான் பீர் விற்பனை!

626
0
SHARE
Ad

Picture 066கோலாலம்பூர், ஏப்ரல் 12 – சுமார் 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜப்பானின் புகழ்பெற்ற கிரின் இச்சிபான் பீரை, மலேசியாவின் கின்னஸ் ஆங்கர் பெர்ஹாட் நிறுவனம் விற்பனைக்கு சேர்த்துள்ளது.

எத்தனையோ வெளிநாட்டு வகை பீர்களை விற்பனை செய்துவரும் அந்நிறுவனம், விற்பனை செய்யவுள்ள முதல் ஜப்பானிய தயாரிப்பு இதுவாகும்.

இது குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹான்ஸ் எஸாடி கூறுகையில், “இந்த வகை பீர் மால்ட் வகையைச் சேர்ந்தது ஆகும். தானியங்களை காய வைத்து தயார் செய்யப்படும் இந்த வகை பீர் சூப்பர் பிரிமியம் தரத்தைக் கொண்டது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

 

Comments