டெல்லி, ஏப்ரல் 12 – டெல்லி மாநிலத்தின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறுதான் என்று, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கெஜ்ரிவால், “டெல்லி முதல்வராக பதவியேற்ற 49 நாட்களில், பதவி விலகினேன். ஜன் லோக் பால் மசோதா நிறைவேற்றப்படாதைக் கண்டித்து, அன்றையே தினமே பதவி விலகியது மிகப்பெரிய தவறு.
அதனால், காங்கிரஸ் கட்சியும், பாஜகவும், ஆம் ஆத்மி கட்சி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தப்பித்துக் கொண்டது என்பது போன்ற தவறான விஷயங்களை பொதுமக்களிடம் பரப்பிவிட்டன.
பதவி விலகுவது குறித்து முடிவெடுத்த பிறகு, பொதுமக்கள் மத்தியில் கூட்டம் நடத்தி, அவர்களுக்கு பதவி விலகுவதற்கு காரணம் என்ன என்பதை கூறிவிட்டு பிறகு அதை செய்திருக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.