Home Featured இந்தியா நடிகர் கமல்ஹாசன் – டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு!

நடிகர் கமல்ஹாசன் – டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு!

690
0
SHARE
Ad

Kamal- kejirewalபுதுடில்லி –  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, நடிகர் கமல்ஹாசன் திடீரெனச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

தூய்மை இந்தியா தூதுவர்களில் ஒருவரான கமல்ஹாசன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைக் குடியசுத் தலைவர் மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அதன்பின்பு, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

இச்சந்திப்பில் இருவரும் தூய்மை இந்தியா திட்டத்தில் தங்களது பங்களிப்பு குறித்து விவாதித்ததாகக்  கூறப்படுகிறது.

மேலும்  தமிழகத்தி்ன் அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்ததாகவும், அப்போது கெஜ்ரிவால் ‘தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்குச் சரியான தலைமை இல்லை; ஆம் ஆத்மி கட்சியின்  மாநில தலைவராக நீங்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று கமல்ஹாசனிடம்  கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் இதற்கெல்லாம் சம்மதிக்கக் கூடிய ஆளா என்ன?