Home கலை உலகம் “போங்கடி நீங்களும் உங்க காதலும்” இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது

“போங்கடி நீங்களும் உங்க காதலும்” இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது

501
0
SHARE
Ad

pongadi-neengalum-unga-kadhalum-movie-stills-1சென்னை, ஏப்ரல் 15 – உதவியாளராக இருந்த எம்.ஏ.ராமகிருஷ்ணன் நடித்து இயக்கிய படம் “போங்கடி நீங்களும் உங்க காதலும்” என்ற படம். இப்படம் முடிவடைந்து பலமாதங்கள் கிடப்பில் கிடந்தது.

எந்த விநியோகஸ்தர்களும் படத்தைப் பார்த்தும் வாங்கி வெளியிட முன் வரவில்லை. இந்நிலையில் ரீச் ட்ரீம் மீடியா என்ற நிறுவனம் இப்படத்தை வாங்கி வெளியிட இருக்கிறது.

இதற்கு முன் சில படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ், கே.ஆர்.கண்ணன் நிறைய பொருள் செலவில் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

#TamilSchoolmychoice

எம்.ஏ. ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள “போங்கடி நீங்களும் உங்க காதலும்” படத்தில் கதாநாயகிகளாக ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடித்திருக்கின்றனர். படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.