லாஸ் ஏஞ்சல்ஸ், ஏப்ரல் 15 – அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹெர்பலைஃப்’ (Herbalife) எனும் உடல் எடை குறைப்பு மற்றும் ஊட்டச்சத்து மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது அமெரிக்க அரசு.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்த ஹெர்பலைஃப் நிறுவனம் தனது பல மில்லியன் விற்பனைப் பிரதிநிதிகள் மூலம் உணவுக் கட்டுப்பாட்டுக்கான (Diet) ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்நிலைலையில் அந் நிறுவனத்தில் இலாபத்திற்காக பிரமிடு வணிக முறை ( Pyramid scheme) ஐ, பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை அந்த நிறுவனம் கடுமையாக மறுத்துள்ளது. இதனிடையே, ஹெர்பலைஃப் நிறுவனத்தின் பங்குகள் கடந்த சில மாதங்களில் 14% என்கிற அளவு வெகுவாகச் சரிந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், அந்த நிறுவனத்திடம் விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அமெரிக்காவின் நீதித்துறையும் (DoJ) மற்றும் அமெரிக்க புலனாய்வுத் துறை (FBI) தெரிவித்துள்ளது. மேலும், பங்குப் பரிவர்த்தனை ஆணையமும் விசாரணை நடத்தி வருவதாக ஹெர்பலைஃப் கூறியுள்ளது.