Home கலை உலகம் ‘தங்கமீன்கள்’ திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்!

‘தங்கமீன்கள்’ திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்!

688
0
SHARE
Ad

thanga-meengal-movie-new-stills-10கோலாலம்பூர், ஏப்ரல் 16 – கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, மலேசியாவில் முதல் நாள் முதல் காட்சியில் ‘தங்க மீன்கள்’ படம் பார்த்து விட்டு எழுதிய அதே பரவசத்தோடு, இன்று 61 வது தேசிய திரைப்பட விழாவில் ‘தங்க மீன்கள்’ படத்திற்கு தமிழ் பிரிவில் தேசிய விருது கிடைத்த செய்தியையும் எழுதுகின்றேன்.

‘கற்றது தமிழ்’ ராம் நடித்து இயக்கிய இந்த திரைப்படத்தில், செல்லம்மா கதாப்பாத்திரத்தில் சாதனாவும், அவரது அம்மாவாக செல்லியும் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் நா.முத்துகுமார் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாள்’ என்ற பாடலுக்கு சிறந்த பாடலுக்கான தேசிய விருதும் மற்றும் செல்லம்மாவாக நடித்த சாதானாவிற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும் கிடைத்திருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை சேர்த்துள்ளது.

#TamilSchoolmychoice

‘தங்க மீன்கள்’ குறித்து செல்லியலின் திரைவிமர்சனத்தில் இப்படத்திற்கு விருதுகள் கிடைப்பது நிச்சயம் என்று குறிப்பிட்டிருந்தோம். எமது கணிப்பு இன்று உண்மையாகியிருப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

இயக்குநர் ராம், பாடலாசியர் நா.முத்துக்குமார், செல்லம்மா சாதனா ஆகியோருக்கு செல்லியலின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தங்கமீன்கள் குறித்த செல்லியல் விமர்சனத்தை படிக்க கீழ்காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்.

‘தங்கமீன்கள்’ -விமர்சனம் 

– ஃபீனிக்ஸ்தாசன்