தமிழ்நாடு, பிப்.15- தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகி வரும் படம் ‘ரம்’ (ரம்பா, ஊர்வசி, மேனகா என்பதின் சுருக்கம்). இப்படத்தில் திரிஷா, பூர்ணா, நிக்ஷா பட்டேல் ஆகியோர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
நடிகை பூர்ணாவின் கதாப்பாத்திரத்திலும், கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாலும் ஏற்கெனவே மூன்று கதாநாயகிகள் இருப்பதனாலும் மேலும் இந்த படத்தில் நான்காவதாகவும் ஒரு பெண் கதாபாத்திரத்தை புகுத்துவதாலும் இப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து, அவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க இஷா சாவ்லாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இப்படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான எஸ்.எம்.ராஜூ இயக்குகிறார். பூர்ணா விலகியதையடுத்து கதையில் நிறைய மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர். மேலும், நான்காவது கதாநாயகியாக ஷார்மியையும் படத்தில் இணைத்துள்ளனர்.
இயக்குனர், பூர்ணாவிடம் இப்படத்திற்காக தொடர்ந்து 22 நாட்கள் கால்ஷீட் கேட்டாராம். இதனால்தான், தன்னை வேண்டுமென்றே ஓரங்கட்டுவதாக கருதி படத்திலிருந்து விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பூர்ணா தற்போது அர்ஜுனன் காதலி, ஜன்னலோரம், படம் பேசும் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.