Home இந்தியா மேகாலயா சட்டசபை தேர்தல்: மன்மோகன்சிங் இன்று பிரசாரம்

மேகாலயா சட்டசபை தேர்தல்: மன்மோகன்சிங் இன்று பிரசாரம்

602
0
SHARE
Ad

man-mohan-singhஷில்லாங், பிப்.15- மேகாலயாவில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் முதல்- மந்திரி முகுல் சங்மா தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு சட்ட சபையின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவதைத் தொடர்ந்து வருகிற 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

#TamilSchoolmychoice

மொத்தம் உள்ள 60 சட்ட சபை தொகுதிகளில் 341 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 113 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள். இவர்கள் சொத்து மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் உள்ளது.

அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் இன்று மேகாலயாவில் சுற்றுப்பயணம் செய்து ஹாசி, மற்றும் ஜெயின்தியா மலைப் பகுதியில் நடைபெறும் பிரசார கூட்டத்திலும், கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கூட்டத்திலும் பேசுகிறார்.

அடுத்தக் கட்டமாக காங்கிரஸ் தலைவர், சோனியா காந்தி வருகிற 19-ந்தேதி ஜோவாய் மற்றும் துரா ஆகிய இடங்களில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் பேசி காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மேகாலயாவில் சுற்றுப்பயணம் செய்து பிரசார கூட்டங்களில் பேசுகிறார்.

பிரதமர் மன்மோகன்சிங் இன்று பிரசாரம் செய்வதைத் தொடர்ந்து அங்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏராளமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.