Home நிகழ்வுகள் இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

634
0
SHARE
Ad

1கோலாலம்பூர், பிப்.15- மை சீஹாட் இந்தியன் 1 மலேசியா (My Sihat Indian 1 Malaysia) இலவச மருத்துவ முகாம் 16.2.2013 தொடங்கி 17.3.2013 வரை நிகழவிருகிறது.

தொடர்ந்து, இந்த இலவச மருத்துவ முகாமானது அஸ்ட்ரோ, ஆர்.தி.எம், மற்றும் மலேசிய தமிழ் நாளிதழ்களான மக்கள் ஓசை, தமிழ் நேசன், நண்பன், தினக்குரல், நம் நாடு ஆகிய ஊடகங்கள் ஆதரவுடன் நடக்கவுள்ளது.

இந்த இலவச மருத்துவ முகாமில், நீரிழிவு நோய் பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை,  பிஎம்ஐ(BMI) பரிசோதனை, கண் பரிசோதனை, கர்ப்பப்பை பரிசோதனை PAP SMEAR, மற்றும் மார்பக பரிசோதனை போன்ற சேவைகள் செய்யப்படும்.

#TamilSchoolmychoice

இந்த பரிசோதனைக்கு வருகின்றவர்கள் குறந்தது 8 மணி நேரம் உணவு உண்ணாமல் வரவேண்டும்.

எனவே, அனைவரும் தவறாது கலந்து பயன்பெற ஏற்பாடுக்குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

மேல் விவரங்களுக்கு, மணிவாசகம் 012-2123960, பிர்மிளா 012-3502784 மற்றும் விக்னேஸ்வரி 012-2626216.