Home வணிகம்/தொழில் நுட்பம் சர்­வ­தேச காபி ஏற்­று­மதியில் வளர்ச்சி!

சர்­வ­தேச காபி ஏற்­று­மதியில் வளர்ச்சி!

416
0
SHARE
Ad

global-coffeeபுது­டில்லி, ஏப்ரல் 25 – சர்­வ­தேச நாடு­களின் காபி ஏற்­று­மதி, சென்ற பிப்­ர­வரி மாதத்தில், 4.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியாகும் காபி மூட்டைகளின் எண்ணிக்கை 9 மில்லியனை எட்டியுள்ளது. கடந்­தாண்டில் இதே மாதத்தில், சர்­வ­தேச காபி ஏற்­று­மதி, 8. 62 மில்லியன் மூட்­டை­க­ளாக இருந்­தது என ‘சர்­வ­தேச காபி கூட்­ட­மைப்பு’ (International Coffee Organisation) தெரி­வித்­துள்­ளது.

இந்த வளர்ச்சியினைத் தொடர்ந்து, வியட்னாமில் காபி ஏற்று­மதி, 28.2 சத­வீதம் அதி­க­ரித்துள்­ளது. இருப்­பினும், நடப்பு 2013 – 14ம் சந்தை பரு­வத்தின் முதல் ஐந்து மாதங்­களில், வியட்னாமின் காபி ஏற்­று­மதி, 7.3 மில்லியன் மூட்டை­க­ளாக சரி­வ­டைந்து உள்ளது.

பிரேசிலின் காபி உற்­பத்­தியில் நிலையற்ற சூழல் நில­வு­வதால், சர்­வ­தேச அளவில் இதன் விலை, ஏற்ற, இறக்­கத்­துடன் காணப்­படுகிறது. சென்ற பிப்­ர­வரியில், பிரே­சிலின் காபி ஏற்­று­மதி, 2.7 மில்லியன் மூட்­டை­க­ளாக உயர்ந்­திருந்தது.

#TamilSchoolmychoice

உல­க­ளவில் காபி ஏற்­று­ம­தியில் மூன்­றா­வது மிகப்­பெரிய நாடாக திகழும், இந்தோனே­ஷி­யாவின் காபி ஏற்­றுமதி, கணக்­கீட்டு மாதத்தில், 0.23 மில்லியன் மூட்­டை­க­ளாக வீழ்ச்சி கண்­டு உள்­ளது. இது கடந்­தாண்டின் இதே மாதத்தில், 0.71 மில்லியன் மூட்­டை­க­ளாக அதி­க­ரித்து காணப்­பட்­டது.

இதே போன்று, இந்­தி­யாவின் காபி ஏற்­று­ம­தியும், 0.59 மில்லியன் மூட்­டை­க­ளி­லி­ருந்து, 0.56 மில்லியன் மூட்­டை­க­ளாக சரி­வ­டைந்­துள்­ளது. மதிப்­பீட்டு மாதத்தில், ஒட்டு மொத்த காபி ஏற்­று­ம­தியில், அராபிகா வகை காபியின் பங்களிப்பு, 5.4 மில்லியன் மூட்­டை­க­ளி­லிருந்து, 5.7 மில்லியன் மூட்­டை­க­ளாக வளர்ச்சியும், ரோபஸ்டா வகை காபி, 3.25 மில்லியன் மூட்­டை­க­ளி­லி­ருந்து, 3.16 மில்லியன் மூட்­டை­க­ளாக வீழ்ச்சியும் அடைந்துள்ளது.

கடந்­தாண்டில், சர்­வ­தேச அளவில் காபி உற்­பத்தி, 9.8 சத­வீதம் (145.24 மில்லியன் மூட்டைகள்) வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.