Home கலை உலகம் அம்மா, ஆடு, இலை, ஈ…இது, அனுஷ்காவின் தமிழ்!

அம்மா, ஆடு, இலை, ஈ…இது, அனுஷ்காவின் தமிழ்!

645
0
SHARE
Ad

anuskaசென்னை, ஏப்ரல் 25 – கன்னடத்தை  தாய் மொழியாகக் கொண்ட அனுஷ்கா, தெலுங்கு சினிமாவில்தான் முதலில் அறிமுகமானார் இவர். கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் மட்டும், 40 படங்கள் வரை நடித்து விட்ட அனுஷ்கா, இதுவரை எந்த மொழியிலும், தனக்குத்தானே ‘டப்பிங்’ பேசியதில்லை.

ஆனால், முதன் முறையாக அஜீத்தின், 55-வது படத்தில் நடிக்கும், அவர் தமிழில் ‘டப்பிங்’ பேச உள்ளார். இதையடுத்து, படப்பிடிப்பு முடிவதற்குள், நன்றாக தமிழ் பேச பயிற்சி எடுக்கும்படி, அனுஷ்காவை கேட்டுக் கொண்டுள்ளார் படத்தின் இயக்குனர்.

அதனால், இதுவரை ஓரிரு தமிழ் வார்த்தை பேசவே, மறுத்து வந்த அனுஷ்கா, இப்போது தனக்குத் தெரிந்த தமிழை, பட குழு நபர்களிடமும் பேசி வருகிறார்.

#TamilSchoolmychoice

குழந்தைகள் படிக்கும் சிறிய கையேட்டை வாங்கி, ‘அம்மா, ஆடு, இலை, ஈ..என, சத்தம் போட்டு படித்து, தீவிர பயிற்சி எடுத்து வருகிறார் அனுஷ்கா.