Home Slider விமானம் கடத்தியவர்களுக்கு சீனாவில் மரண தண்டனை

விமானம் கடத்தியவர்களுக்கு சீனாவில் மரண தண்டனை

1238
0
SHARE
Ad

பெய்ஜிங்,டிச.12 – விமானம் கடத்தலில் ஈடுபட்டவர்களில் மூன்று பேருக்கு சீனா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சீனாவில் ஷின்ஜியாங் மாகாணத்தின் எயிர்கூர் பகுதில் உள்ள முஸ்லிம்கள் சிலர் தனி நாடு கேட்டு போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29-ந்தேதி இப்பகுதியை சேர்ந்த 6 பேர் ஹோட்டன் நகரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தை கடத்தினர். அப்போது, கடத்தல்காரர்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே விமானம் புறப்பட்ட இடத்துக்கு மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதுதொடர்பாக முசாயூசுப், இமின், ஓமர், அலி மூசா ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

#TamilSchoolmychoice

அவர்களில் முசாயூசுப் உள்பட 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அலி மூசாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.