Home கலை உலகம் சாதகமான எண்ணங்களை வைத்திருங்கள் – ரஜினிகாந்த் பிறந்த நாள் செய்தி

சாதகமான எண்ணங்களை வைத்திருங்கள் – ரஜினிகாந்த் பிறந்த நாள் செய்தி

1329
0
SHARE
Ad

சென்னை,டிச.12 – இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து வரும் ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் செய்தியாக “சாதகமான, தன்னம்பிக்கையான எண்ணங்களை (பாஸிடிவ் தாட்ஸ்) வையுங்கள்’  என்று கூறியிருக்கிறார்.

இன்று அதிகாலை முதல் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்கள் ரஜினிகாந்தை காண திரண்டு வந்திருந்தனர். இன்று முழுவதும் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்த ரஜினிகாந்த், அதன்படியே அவ்வப்போது தனது வீட்டின் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்து வருகிறார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த ரஜினிகாந்த் பேசுகையில், “3டி யில் வெளியாகியிருக்கும் எனது சிவாஜி படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. அதைப் பார்த்து நான் பிரமித்துப்போனேன். இன்று எனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறேன். ரசிகர்களின் பிரார்த்தனையால் நல்ல ஆரோக்யத்துடன் நலமாக இருக்கிறேன்.” என்று கூறினார்.

ரசிகர்களுக்கு உங்கள் பிறந்தநாள் வாழ்த்து என்ன? என்று கேட்டதற்கும் “எப்போது பாஸிட்டிவான தாட்ஸ் உடன் இருக்க வேண்டும். எதில் ஈடுபட்டாலும் அது முடியும் என்று நினைத்து ஈடுபட வேண்டும். எனது பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள், என்னுடைய பிறந்தநாளை அவர்களுடைய பெற்றோர் பிறந்தநாளாக நினைத்து அவர்களை கொண்டாட வேண்டும் என்றும் நான் கேட்டுகொள்கிறேன்.” என்றார்.

#TamilSchoolmychoice

உங்கள் மனைவி உங்கள் பிறந்தநாளுக்கு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். உங்கள் மகள்கள் என்ன பரிசு கொடுத்தார்கள்? என்றதற்கு, “அது சர்ப்ரைஸாக இருக்கிறது. அவர்கள் எனக்கென்று பரிசு ஒன்றை வைத்திருக்கிறார்கள். அது என்ன என்பது சர்ப்ரைஸ்.” என்றார்.