Home கலை உலகம் பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்

பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த்

1067
0
SHARE
Ad

சென்னை,டிச.12 – தனது ஒவ்வொரு பிறந்த நாளன்றும் சென்னையில் இல்லாமல், எங்கேயாவது சென்று விடும் ரஜினிகாந்த், இந்த ஆண்டு பிறந்த நாளுக்கு தனது போயஸ் கார்டன் வீட்டில் தான் எங்கும் போகாமல் இருந்து வருகின்றார். இன்று முழுவதும் அவர் அவ்வப்போது வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தார்.

12-12-12 என்ற இந்த சிறப்பான தேதியில் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ரஜினிகாந்தின் போயஸ் கார்டவ் வீட்டின் முன்பு இன்று அதிகாலை முதலே ரசிகர்கள் திரள ஆரம்பித்தார்கள். ரஜினியின் வீட்டு முன்பு மேடை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வபோது ரஜினிகாந்த் வெளியே வந்து, அந்த மேடையில் ஏறி தனது ரசிகர்களை சந்தித்து கை அசைத்தப்படி இருக்கிறார். தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார்.

சன் டிவியின் நிகழ்ச்சியொன்றில் தோன்றிய அவர், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்கள் அனைவருக்கும் நேரடியாக நன்றி சொல்ல முடியாத சூழ்நிலையில் தொலைக்காட்சி வழி நன்றி கூறிக் கொள்வதாக தெரிவித்தார்.