பீஜிங், மே 2 – சீனாவின் உரும்கி ரயில் நிலையத்தின் உள்ளே இன்று நுழைந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். உயிர் பயத்தில் ஓடிய மக்களை வாசலில் நின்றிருந்த தீவிரவாதிகள் மடக்கிப் பிடித்து கண்மூடித் தனமாக வெட்டித் தள்ளினர்.
இச்சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 79 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சீன அதிபர் க்சி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.