Home உலகம் கருங்கடல் பகுதிகளில் அமெரிக்க ராணுவ இருப்பை அதிகரிக்க ருமேனியா வலியுறுத்தல்!

கருங்கடல் பகுதிகளில் அமெரிக்க ராணுவ இருப்பை அதிகரிக்க ருமேனியா வலியுறுத்தல்!

583
0
SHARE
Ad

imagesபுகாரெஸ்ட்,மே 3 – முன்னாள் கம்யூனிச நாடான ருமேனியா, ரஷ்யாவின் எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களைத் தவிர்க்க கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை அதிகரிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நேட்டோ துருப்புகளில், அமெரிக்க ராணுவத்தின் கீழ் ருமேனியா வீரர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் செயலாற்றி வருகின்றன. ரஷ்யாவின் கருங்கடல் பகுதியிலான ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துவருவது தங்களுடைய அண்டை நாடான மால்டோவாவை கைப்பற்றக்கூடும் என்று ருமேனியா கருதுகின்றது.

எனவே கருங்கடல் பகுதியில் அமெரிக்கா நடத்திவரும் ராணுவ ஒத்திகை மற்றும் இருப்பை அதிகரிக்குமாறு கோரியுள்ளது. ருமேனியாவின் அதிபர் டிரையன் பசெஸ்கு, ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு நேட்டோவின் ராணுவ வளங்களை மீண்டும் நிலைப்படுத்துமாறு கடந்த சில மாதங்களாக அழைப்பு விடுத்து வருகின்றார்.

#TamilSchoolmychoice

மேலும், கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டம் ஒன்றில் அந்நாட்டின் பிரதமர் விக்டர் போன்டா, நாட்டின் பாதுகாப்பிற்கான இந்த ஆண்டின் பட்ஜெட் தொகை, அந்நாட்டுப் பணமதிப்பில் 700 மில்லியனாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.