Home வணிகம்/தொழில் நுட்பம் முதல் காலாண்டில் டேப்லெட் கணினிகளின் விற்பனை மந்தம்!

முதல் காலாண்டில் டேப்லெட் கணினிகளின் விற்பனை மந்தம்!

470
0
SHARE
Ad

ipad_buyer_apமே 5 – உலக அளவில் 2014-ன், முதல் காலாண்டில் (ஜன­வரி முதல் மார்ச்), டேப்லெட்களின் விற்­பனை  3.9% அதி­க­ரித்து உள்­ளது. எனினும் இது மிகவும் மந்தமான வளர்ச்சியாகவே கருதப்படுகின்றது.

டேப்லெட்களின் விற்­பனை பற்றி ஆராய்ச்சி நிறுவனம் ஐடிசி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,”கடந்த 2013-ம் ஆண்டின், இதே காலாண்டில், இந்த எண்­ணிக்கை, 48.6 மில்லியனாக இருந்­தது. தற்­போது 50.4 மில்லியனாக உயர்ந்துள்ளது. எனினும் இந்த வளர்ச்சியானது, நிறுவனங்களால் எதிர்பார்க்கப்பட்டதை விட மிகவும் குறைவாகும். அகன்ற திரை­யுடன், பல்­வேறு நவீன தொழில்­நுட்ப அம்­சங்­களுடன் கூடிய திறன்பேசிகள், அதி­க­ளவில் சந்­தைக்கு வரத் துவங்­கி­யதே, டேப்லெட்களின் மந்தமான வளர்ச்சிக்குக் காரணம்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கணக்­கீட்டு காலாண்டில், ஆப்பிள் நிறு­வ­னத்தின் டேப்லெட் விற்­பனை, 19.5 மில்லியன் என்ற எண்­ணிக்­கை­யி­லி­ருந்து, 16.4 மில்லியனாக சரி­வ­டைந்­துள்­ளது. எனினும் டேப்லெட்கள் விற்பனையில் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும், ஆப்பிள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது.

#TamilSchoolmychoice