Home இந்தியா சென்னை குண்டுவெடிப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

சென்னை குண்டுவெடிப்புக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

532
0
SHARE
Ad

Mkspictureசென்னை, மே 5 – சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டுமென திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குண்டுவெடிப்பில் காயமடைந்து, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று (மே 4) நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, திமுக சார்பாகவும், தலைவர் கருணாநிதி சார்பாகவும் இங்கு வந்துள்ளேன். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் வேதனைக்குரியது.

#TamilSchoolmychoice

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு, கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதியன்றே மத்திய உளவு மற்றும் சிறப்புப் பாதுகாப்பு காவலர்கள் சார்பில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

stalinஆனால் தமிழக அரசு இதற்கு எவ்வித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக அரசும், காவல்துறையும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

இது போன்ற விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல்படுவதை விடுத்து மோதல் போக்கை கையாண்டு வருகிறது.

காயமடைந்தவர்களை தமிழக முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர், கொடநாட்டில் இருந்துகொண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் என்றார் மு.க.ஸ்டாலின்.