Home உலகம் வாலிபரை கீழே தள்ளி இழுத்துச் சென்ற பேய் – சிசிடிவி கேமராவில் பதிவு!

வாலிபரை கீழே தள்ளி இழுத்துச் சென்ற பேய் – சிசிடிவி கேமராவில் பதிவு!

533
0
SHARE
Ad

sawவாஷிங்டன், மே 5 – அமெரிக்காவில் உள்ள பிரபல தங்கும்விடுதி ஒன்றில் ஒரு நிழல் உருவம் வாலிபர் ஒருவரை கீழே தள்ளி இழுத்துச் சென்றது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரபல தங்கும்விடுதியின் உள்ளே வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது நிழல் போன்ற உருவம் அந்த வாலிபரை கீழே தள்ளி அவரது வலது காலைப் பிடித்து சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது.

அப்போது அந்த வாலிபர் பயத்தில் அலறியுள்ளார். இதையடுத்து அந்த உருவம் அங்கிருந்து மறைந்துவிட்டது. உடனே அந்த வாலிபர் பீதியில் எழுந்து ஓடிவிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த காட்சி தங்கும்விடுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதை அந்த தங்கும்விடுதி ஊழியர் ஒருவர் யூடியூபில் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட சில மணிநேரத்திலேயே அந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். மேலும் அந்த வீடியோ பேஸ்புக் மற்றும் ட்விட்டரிலும் வெளியாகியுள்ளது. ஒரு பேய் வாலிபரை இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.