கொழும்பு, மே 5 – இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்கள், நல்லிணக்கத்தையும், மனித உரிமையையும் மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த, பிஷப் ரஞ்ஜித் தலைமையிலான குழுவினர், வாடிகன் நகரில், போப் பிரான்சை சந்தித்து பேசினர். அப்போது, போப் பிரான்சிஸ் கூறியதாவது, இலங்கையில் சிங்களர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நிலவும் பூசலால், அங்கு பதற்ற நிலை காணப்படுகிறது.
தேசிய ஒற்றுமை என்ற போலியான பெயரில், அங்குள்ள பெரும்பான்மை சமுதாயத்தினர் (சிங்களர்) வன்முறை மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு, பதற்ற நிலையை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே, இலங்கையில் உள்ள கத்தோலிக்கர்கள், நல்லிணக்கத்தையும், மனித உரிமையையும் மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.