Home இந்தியா ஐபிஎல் 7: ஐதராபாத் அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி!

ஐபிஎல் 7: ஐதராபாத் அணியை வீழ்த்தியது பெங்களூர் அணி!

518
0
SHARE
Ad

ipllபெங்களூர், மே 5 – 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், 24-வது லீக் ஆட்டம் நேற்றிரவு பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின.

இதில் டாசில் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 156 ரன்கள் இலக்கை நோக்கி பெங்களூர் அணி ஆடியது. 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 158 ரன்கள் திரட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.

#TamilSchoolmychoice

ipl 7டிவில்லியர்ஸ் 89 ரன்களுடன் (41 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்) களத்தில் இருந்தார். 6-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூர் அணிக்கு இது 3-வது வெற்றியாகும்.

சொந்த ஊரில் ஆடிய முதல் ஆட்டத்திலேயே வெற்றிக்கனியை பறித்து இருக்கிறது. அதே சமயம் 6-வது ஆட்டத்தில் விளையாடிய ஐதராபாத்துக்கு இது 4-வது தோல்வியாகும்.