Home நாடு கர்ப்பாலுக்கு பதிலாக ராம் கர்ப்பால் தயார் – ஆனால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே பதவிகளா? ஜசெகவில்...

கர்ப்பாலுக்கு பதிலாக ராம் கர்ப்பால் தயார் – ஆனால், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே பதவிகளா? ஜசெகவில் அதிருப்தி!

484
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன், மே 7 மறைந்த கர்ப்பால் சிங் ஜனநாயக செயல் கட்சிக்காக எவ்வளவோ போராட்டங்கள் நடத்தியிருந்தாலும், எவ்வளவுதான் தியாகங்கள் செய்திருந்தாலும், அவரது குடும்பத்தினருக்கே எல்லா பதவிகளும் வழங்கப்பட வேண்டுமா என்ற அதிருப்தி அலை ஜசெகவில் எழுந்துள்ளது.

Ram Karpal Singh 440 x 215இந்நிலையில், கர்ப்பால் சிங்கின் மூன்றாவது மகன் ராம் கர்ப்பால் சிங் (வயது 38),  இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவுள்ள புக்கிட் குளுகோர் இடைத்தேர்தலில் போட்டியிட தன்னைதயார்ப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பினாங்கில் பிறந்தவரான வழக்கறிஞர் ராம் கர்ப்பால், வேட்பாளர் பட்டியலில்தனது பெயரும் இடம் பெற்றிருப்பதாகக் கூறினார். இருந்த போதிலும், இறுதிமுடிவு ஜசெகவை பொறுத்தது என்றார் அவர்.

இங்குள்ளஹன் சியாங் இடைநிலைப்பள்ளியில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கர்ப்பாலுக்கான நினைவஞ்சலிகூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, ராம் கர்பால் செய்தியாளர்களிடம் பேசினார்.

கர்ப்பாலின் மகள் சங்கீத் கவுர் டியோவும் வேட்பாளர் பட்டியலில்சேர்க்கப்பட்டிருக்கிறாரா? என்ற நிருபரின் கேள்விக்கு, அப்படி ஏதும் இல்லைஎன்று பதிலளித்த ராம் கர்பால், இன்றுபுதன்கிழமை புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத்தொகுதிக்கான வேட்பாளரை ஜசெக அறிமுகப்படுத்தும் என்றார்.

இதே பத்திரிக்கையாளர் சந்திப்பில் கர்ப்பால் சிங் தங்களை அரசியலுக்கு வருமாறு தனிப்பட்ட முறையில்அழைத்ததுண்டா என்ற கேள்வியும் ராம் கர்ப்பாலிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “அரசியல் பயணம் குறித்து எனது அண்ணன்களிடமும் மற்றவர்களிடமும் என்தந்தை பேசியிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசியதில்லை”என்று பதிலளித்தார்.

இதற்கிடையில், தனக்கு எதிரான தேச நிந்தனை குற்றச்சாட்டின் விளைவாகபுக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து தாம் விலகநேர்ந்தால், அத்தொகுதிக்கு ராம் கர்பால் நிறுத்தப்பட வேண்டும் என்றுகர்பால் சிங் – ஜெலுத்தோங் புலி” எனும் தனது சுயசரிதை நூலில் மறைந்த கர்ப்பால்சிங் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாண்டு தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஜசெக உறுப்பினராகசேர்ந்துள்ள ராம் கர்பால், கடந்தாண்டு நடைபெற்ற 13ஆவது பொதுத் தேர்தலின்போதுதான் முதல் முறையாக தனது தந்தை கர்ப்பாலுடன் பொதுமக்கள் முன்னிலையில்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.

மே 25இல் புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல்

இதனிடையே, கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று நிகழ்ந்த சாலை விபத்தில்கர்ப்பால் சிங் அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் மே 12ஆம் தேதியும் வாக்களிப்பு மே 25 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தில் அனைவருக்கும் பதவிகளா?

இதற்கிடையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையைப் பின்பற்றி வரும் ஜசெகவில், ஒரே குடும்பத்தினருக்கு மட்டும் இத்தனை பதவிகளா என்ற அதிருப்தி அலை பரவலாக எழுந்துள்ளது.

கர்ப்பாலின் சேவைகளும், தியாகங்களும் போற்றப்பட வேண்டியவைதான். ஆனால், அவரது மகன் கோபிந்த் சிங் டியோ ஏற்கனவே இரண்டு தவணைகளாக பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

மற்றொரு மகன், ஜக்டிப் சிங் டியோ பினாங்கு மாநில சட்டமன்ற உறுப்பினராகவும், ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார்.

அந்த வகையில் ராம் கர்ப்பால் சிங்கிற்கு புக்கிட் குளுகோர் ஒதுக்கப்பட்டால், அதன்மூலம் ஒரே குடும்பத்தில் மூன்று சகோதரர்களுக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலைமை உருவாகும்.

இதனால், எதிர்மறையான கருத்துகள் மக்களிடத்தில் உருவாகும் என்பதோடு, ஜசெகவில் உழைத்து வரும் மற்ற தலைவர்களிடத்திலும் அதிருப்திப் போக்குகள் உருவாகும்.