இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பு, சர்வதேச அளவில் போலியோ வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக அறிவித்தது. இதன் முதல்கட்ட தடுப்பு நடவடிக்கையாக போலியோ நோய்த்தாக்கம் அதிகம் காணப்படும் பாகிஸ்தான், கேமரூன் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய சில விதிகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது,
அதன் படி மேற்கூறிய நாடுகளில் உள்ள அனைத்து மக்களுக்கும், நான்கு வாரத்திற்கு மேல் தங்கும் பார்வையாளர்களுக்கும் வாய் வழி போலியோ சொட்டு மருந்து அல்லது தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் சர்வதேசப் பயணத்தின் முதல் 4 வாரங்களிலிருந்து 12 மாதங்களுக்குள் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 15 முதல் இந்தியா, பாகிஸ்தான் மீது இந்தத் தடை உத்தரவினைச் செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவிற்கு வருகை தரும் பாகிஸ்தானியர்கள் தங்களின் விசா அனுமதிகளுடன் போலியோ தடுப்பூசி சான்றிதழை அளித்த பின்னரே அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.