Home வணிகம்/தொழில் நுட்பம் வெனிசுலாவில் உற்பத்தியை நிறுத்தியது ஃபோர்டு!

வெனிசுலாவில் உற்பத்தியை நிறுத்தியது ஃபோர்டு!

497
0
SHARE
Ad

fordகாரகாஸ், மே 7 – தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் மக்கள் தலைவராக இருந்த அதிபர் ஹியுகோ சாவேசின் மறைவிற்குப் பிறகு கடந்த ஆண்டு நிக்கோலஸ் மதுரோ பதவிக்கு வந்தார். ஆனால் அங்கு நிலவும் பொருளாதார பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்விப் பிரச்சினைகள் போன்றவற்றால் அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

வெனிசுலா அரசாங்கம் மூன்றுவிதமான பணப் பரிமாற்ற கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருவதால் அங்கு அந்நிய செலாவணித் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. கார்கள் உற்பத்தியும் அந்நிய செலாவணிப் பிரச்சினையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஃபோர்டு நிறுவனம் வலென்சியா நகரில் செயல்பட்டு வந்த தங்களது தொழிற்சாலைப் பிரிவில் தயாரிப்பினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் பணக் கட்டுப்பாடுகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அமெரிக்க டாலர்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக மற்ற கார் உற்பத்தியாளர்களும் கூறுகின்றனர், 

#TamilSchoolmychoice

வெனிசுலாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹைமன் எல் டிரோடி கூறுகையில், “ஃபோர்டு நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், அந்நிறுவனத்திற்கு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர் அரசாங்கத்தால் வழங்கப்படும், அதன் பின்னர் இரண்டு வார காலத்தில் தொழிற்சாலையின் உற்பத்திப்பணி மீண்டும் துவங்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.