Home வணிகம்/தொழில் நுட்பம் கார் உதிரி பாகங்களுக்கு தாவரத்தால் ஆன பிளாஸ்டிக்குகள் – ஃபோர்ட் நிறுவனம் முடிவு

கார் உதிரி பாகங்களுக்கு தாவரத்தால் ஆன பிளாஸ்டிக்குகள் – ஃபோர்ட் நிறுவனம் முடிவு

571
0
SHARE
Ad

downloadஜூன் 11 – உலக அளவில் புகழ் பெற்ற பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுனமான ஃபோர்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கார்கள் உற்பத்தியில் இயன்ற பாகங்களுக்கு பெட்ரோலிய பிளாஸ்டிக்குகள் அல்லாமல்  தாவர அடிப்படையிலான பிளாஸ்டிக்கை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் முன்னோட்டமாக ஃபோர்டு நிறுவனம், தனது கார்களில் உள்ள காயின் ஹோல்டர் மற்றும் வயரிங் பிராக்கெட்ஸ்களை தக்காளியின் தோல்கள் மற்றும் இழைகள் (Fibers) -ஐ கொண்டு உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவின் பிரபல கெட்ச்அப் தயாரிப்பாளர் ஹெயின்ஸ் உடன் கைகொர்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது பற்றி ஃபோர்டு பிளாஸ்டிக் பிரிவின் வல்லுநர் எலென் லீ கூறுகையில், “கார்களில் ஒரு சில பாகங்களை துணை பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்க திட்டமிட்டு உள்ளோம். இதனால் அத்தகைய பாகங்கள் புதுப்பிக்கத்தக்க மற்றும் மறுசுழற்சி தன்மை கொண்டதாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஃபோர்டு நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.