Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவில் நடப்பாண்டில் சாதனை படைத்த ஃபோர்டு!

மலேசியாவில் நடப்பாண்டில் சாதனை படைத்த ஃபோர்டு!

630
0
SHARE
Ad

Ford_Motor_Companyகோலாலம்பூர், நவம்பர் 12 – மலேசியாவில்  ஃபோர்டு நிறுவனத்தின் அக்டோபர் மாத விற்பனை செப்டம்பர் மாதத்தை விட 2 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் ‘ரேஞ்ஜர்’ (Ranger), ‘எகோஸ்போர்ட்’ (EcoSport), ‘குக’ (Kuga) மற்றும் ‘பியஸ்டா’ (Fiesta) ரக கார்களின் தேவைகளும் அதிகரித்துள்ளன.

இது தொடர்பாக மலேசியா மற்றும் ஆசிய-பசிபிக் சந்தைகளுக்கான ஃபோர்ட் மோட்டார் நிறுவனத்தின் கூட்டுறவு மேலாண்மை இயக்குனர் டேவிட் வெஸ்டர்மேன் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“இந்த வருடத்தில் எங்கள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவில் 11,426 கார்களை விற்பனை  செய்து  சாதனை படைத்துள்ளது. இதுவே மலேசியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் அதிகபட்ச விற்பனையாகும்.”

“இந்த வருடத்தின் விற்பனை எங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.  ஃபோர்டு நிறுவனத்தின் மிக முக்கிய சந்தைகளுள் ஒன்றாக மலேசியா வளர்ந்து வருகின்றது.”

“இதன் மூலம், புதிய வாகனங்கள் அறிமுகம், வாடிக்கையாளர்களின் சேவை உள்ளிட்ட முக்கிய அம்சங்களில் மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பியஸ்டா எஸ்டி ரக கார்களும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் மூலம் சிறந்த கார்களுக்கு மலேசியாவில் எப்பொழுதும் வரவேற்பு இருக்கும் என்பது நிரூபணமாகி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.