Home நாடு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டியதாக இருவர் கைது

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டியதாக இருவர் கைது

478
0
SHARE
Ad

KualaLumpur CourtsComplex-கோலாலம்பூர், நவம்பர் 12 –  ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நிதி ஆலோசகரான ரோகைமி அப்துல் ரகிம் (37 வயது) மற்றும் கார் விற்பனையாளர் முகமட் பவுசி மிஸ்ரக் (34 வயது) ஆகிய இருவரும் இணையம் வழி ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்ததாக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டனர்.

கடந்த மார்ச் 29 முதல் அக்டோபர் 13ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இருவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கவில்லை. மாறாக குற்றச்சாட்டின் தன்மையைப் புரிந்து கொண்டதாக தலையசைத்தனர். குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் இருவருக்கும் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

#TamilSchoolmychoice

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை மறுத்த நீதிபதி, அடுத்தக்கட்ட விசாரணையை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதற்கிடையே ரஷீட் (26 வயது) என்ற நபரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புக்கு உதவும் பொருட்டு சிரியா செல்ல முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இவர் கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கடந்த டிசம்பர் 28 முதல் நடப்பாண்டு ஏப்ரல் 7ஆம் தேதிக்குட்பட்ட காலகட்டத்தில் சிரியா செல்ல முயற்சித்ததாகத் தெரிகிறது. இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.