Home உலகம் நைஜீரியா மாணிவிகளை பாலியல் அடிமைகளாக்குவோம் என போக்கோ ஹரம் அமைப்பினர் மிரட்டல்!

நைஜீரியா மாணிவிகளை பாலியல் அடிமைகளாக்குவோம் என போக்கோ ஹரம் அமைப்பினர் மிரட்டல்!

473
0
SHARE
Ad

naijeriaஅபுஜா, மே 7 – நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போக்கோ ஹரம் தீவிரவாத அமைப்பினர், கடந்த மாதம், அந்நாட்டில் உள்ள போர்னோ மாகாணத்தின், சிபோக் பகுதியில் உள்ள பெண்கள் உறைவிட மேல்நிலைப் பள்ளியில் படித்துவந்த 276 மாணவிகளை கடத்தி சென்றனர்.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களை விடுதலை செய்தாலும், மீதி உள்ள நூற்றுக்கணக்கான பெண்களை பிணைக்கைதிகளாய் வைத்திருந்தனர்.

இந்நிலையில் தீவிரவாதிகள் நேற்று முன்தினம் காணொளிக்காட்சி ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில் கடத்தப்பட்ட மாணவிகளை பாலியல் அடிமைகளாக விற்க போவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தீவிரவாதிகளின் தலைவன் அபுபக்கர் செகாவு, பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளான்.

#TamilSchoolmychoice

போக்கோ ஹரம் தீவிரவாதிகளின் இந்த மிரட்டலால் மாணவிகளின் குடும்பத்தினர், இடையே கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவிகளை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம் என அதிபர் ஜோனாதன் உறுதி அளித்துள்ளார். அதற்காக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியை அவர் நாடியுள்ளார்.