வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இரண்டாவது ஆட்டத்தில் ஐஸ்லாந்தும் நைஜீரியாவும் மோதின.
‘டி’ பிரிவுக்கான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு குழுக்களுமே கோல்கள் அடிக்க முடியாமல் திணறின.
ஆட்டத்தின் 75-வது நிமிடத்தில் அவரே இரண்டாவது கோலையும் அடிக்க நைஜீரியா 2-0 கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்தது.
இதற்கிடையில் 83-வது நிமிடத்தில் ஐஸ்லாந்துக்கு கிடைத்த பினால்டி வாய்ப்பை ஜில்பி சிகுர்டசன் தவற விட்டார். பினால்டி பந்தை கோலாக்க முடியாமல், கோல் கம்பத்துக்கும் மேலே அவர் பந்தை அடிக்க, ஜஸ்லாந்துக்குக் கிடைத்த ஒரே வாய்ப்பும் பறிபோனது.
இறுதியில் நைஜீரியா 2-0 கோல் எண்ணிக்கையில் ஐஸ்லாந்தை வென்றது.