Home உலகம் 2-1 : அர்ஜெண்டினா 2-வது சுற்றுக்கு செல்கிறது!

2-1 : அர்ஜெண்டினா 2-வது சுற்றுக்கு செல்கிறது!

1298
0
SHARE
Ad

மாஸ்கோ – மெஸ்ஸியின் அபார ஆட்டத்தோடு கூடிய ஒரு கோல் – அதைத் தொடர்ந்து மற்றொரு விளையாட்டாளர் மார்க்கோஸ் ரோஜோவின் 86-வது நிமிட கோல் – எல்லாம் சேர்ந்த கலவையாக ஆப்பிரிக்க சிங்கங்களான நைஜீரியாவை 2-1 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து அர்ஜெண்டினா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

முதல் கோலை மெஸ்ஸி 14-வது நிமிடத்திலேயே அடித்து அர்ஜெண்டினாவை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

எனினும் நைஜீரியாவுக்குக் கிடைத்த பினால்டி வாய்ப்பை 51-வது நிமிடத்தில் அழகான கோலாக்கினார் அந்நாட்டின் விளையாட்டாளர் மோசஸ்.

#TamilSchoolmychoice

ஆட்டம் முடிய 4 நிமிடங்களே இருந்த வேளையில் 86-வது நிமிடத்தில் மார்க்கோஸ் ரோஜோ மற்றொரு கோலைப் புகுத்தி அர்ஜெண்டினா முழுவதும் உற்சாகம் கரைபுரளச் செய்தார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘டி’ பிரிவில் 4 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகிறது அர்ஜெண்டினா. 3 புள்ளிகளுடன் நைஜீரியா பின்தங்கிவிட்டது. நேற்றைய ஆட்டத்தில் தோல்வியுற்றிருந்தால் அல்லது சமநிலை கண்டிருந்தால் கூட – அர்ஜெண்டினாவுக்குப் பதிலாக நைஜீரியா இரண்டாவது சுற்றுக்குச் சென்றிருக்கும்.

எதிர்வரும் ஜூன் 30-ஆம் தேதி அர்ஜெண்டினா இரண்டாவது சுற்றில் பிரான்சைச் சந்திக்கும்

‘டி’ பிரிவில் 9 புள்ளிகளோடு முதல் நிலை பெற்றிருக்கும் குரோஷியாவும் அடுத்த இரண்டாவது சுற்றுக்குச் செல்கிறது.