Home உலகம் ஐஸ்லாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறுகிறது குரோஷியா!

ஐஸ்லாந்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறுகிறது குரோஷியா!

978
0
SHARE
Ad

மாஸ்கோ – மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 2.00 மணிக்கு நடைபெற்ற ‘டி’ பிரிவுக்கான ஆட்டத்தில் ஐஸ்லாந்தை 2-1 கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து, அந்தப் பிரிவில் 9 புள்ளிகளோடு முதல் நிலை பெற்றிருக்கும் குரோஷியா அடுத்த இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிச் செல்கிறது.

குரோஷியாவின் முதல் கோலை 53-வது நிமிடத்தில் பாடெல்ஜ் அடிக்க, இரண்டாவது கோலை பெரிசிக் 90-வது நிமிடத்தில் அடித்தார்.

ஜில்பி சிகர்ட்சன் ஐஸ்லாந்து சார்பாக 76-வது நிமிடத்தில் ஒரு கோலைப் புகுத்தி ஆறுதலைத் தேடித் தந்தார்.

#TamilSchoolmychoice

எனினும் இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ஐஸ்லாந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

‘டி’ பிரிவில் 4 புள்ளிகளைப் பெற்று குரோஷியாவுடன் சேர்ந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுகிறது அர்ஜெண்டினா.

இனி அடுத்து குரோஷியா எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி டென்மார்க்கைச் சந்திக்கும்.