Home One Line P1 மேலும் இரு சிறுவர்களுக்கு சபாவில் போலியோ நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது!

மேலும் இரு சிறுவர்களுக்கு சபாவில் போலியோ நோய் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது!

869
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு டிசம்பரில் துவாரானில் மூன்று மாத ஆண் குழந்தைக்கு போலியோ நோய் இருப்பதாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து, சபாவில் மேலும் இரண்டு சிறுவர்கள் போலியோ கிருமி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எட்டு  வயது மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்களும் வெளிநாட்டினர் என்று சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

சண்டாக்கானைச் சேர்ந்த எட்டு வயது சிறுவனுக்கு போலியோ தடுப்பூசி போடப்படவில்லை. கடந்த டிசம்பர் 9-ஆம்  தேதியன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது, மூன்று நாட்களுக்குப் பிறகு அவரால் நடக்க முடியவில்லை.”

#TamilSchoolmychoice

கினாபாத்தாங்கானில் தடுப்பூசி போடப்படாத மற்றொரு சிறுவனுக்கு, கடந்த நவம்பர் 17-ஆம் தேதியன்று காய்ச்சல் ஏற்பட்டு ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி, முதுகுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், அவரால் நடக்க முடியவில்லை. நோயாளி இப்போது குச்சியுடன் நடக்க முடிகிறது.” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அனைத்து நோயாளிகளும் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நிலையான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

வாய்வழி போலியோ சொட்டு மருந்துகளை பெறுவதன் மூலம் குழந்தைகளின் தடுப்பூசி தேவைகளுக்கும் கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சகம் சபா மக்களை குறிப்பாக பெற்றோர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

போலியோ அறிகுறிகள் இருந்தால் மருந்தகம் மற்றும் மருத்துவமனையில் ஆரம்ப சிகிச்சை பெறவும், சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் அவர் மக்களுக்கு நினைவுபடுத்தினார்.