Home இந்தியா மகாராஷ்டிராவில் நக்சலைட் தாக்குதல் – 7 போலீஸார் பலி!

மகாராஷ்டிராவில் நக்சலைட் தாக்குதல் – 7 போலீஸார் பலி!

460
0
SHARE
Ad

beirut_bombநாகபுரி, மே 12 – மகாராஷ்டிரத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய கண்ணிவெடித் தாக்குதலில் 7 போலீஸார் பலியானார்கள். மேலும், 2 போலீஸார் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது, கட்சிரோலி மாவட்டம் பவிமுராண்டா மற்றும் முர்முரி கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டுப்பகுதியில், மகாராஷ்டிர மாநில போலீஸில் ஒருபிரிவினரான நக்சலைட் ஒழிப்பு அதிரடிப்படையினர், ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 மணியளவில் 4 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.

முர்முரி ஆறு அருகே உள்ள பாலத்தின் மீது 4 வாகனங்களும் சென்றபோது, அதில் 3ஆவதாக சென்ற வாகனம் நக்சலைட்டுகள் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கியது. இதில் அந்த வாகனம் இரண்டு துண்டானது.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதலில், வாகனத்தில் சென்ற போலீஸார் 7 பேர் உடல் சிதறி பலியாயினர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்த மகாராஷ்டிர மாநில உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், தாக்குதலில் காயமடைந்த 2 பேரும், ஹெலிகாப்டர் மூலம் நாகபுரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கண்ணிவெடித் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.