Home தொழில் நுட்பம் ப்ளூ ஜீன்ஸ் காணொளிக் கலந்துரையாடல் சேவையில் அதிரடி மாற்றம்!

ப்ளூ ஜீன்ஸ் காணொளிக் கலந்துரையாடல் சேவையில் அதிரடி மாற்றம்!

597
0
SHARE
Ad

Blue jeansமே 16 – கிளவுட் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு வீடியோ கான்ஃபரன்ஸிங் எனும் காணொளிக் காட்சிகள் மூலம் கலந்துரையாடும் சேவையை வழங்கி வரும் ப்ளூ ஜீன்ஸ் நிறுவனம் தனது வலையமைப்பில் புதிய அதிரடி மாற்றம் ஒன்றை செய்துள்ளது.

உலக அளவில் சிறப்பான வீடியோ கான்ஃபரன்ஸிங் சேவையை வழங்கி வரும் ப்ளூ ஜீன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலமாக ஒலி, ஒளி மற்றும் வலைதளங்களில் கலந்துரையாடல் போன்ற வசதிகளை செய்து கொடுத்து வந்தது.

ப்ளூ ஜீன்ஸின் இந்த வீடியோ கான்ஃபரன்ஸிங் சேவையின் மூலம் ஒரு சமயத்தில் 25 நபர்கள் வரை இணையத்தின் மூலமாக கலந்துரையாட முடியும். தற்போது அந்நிறுவனம் சுமார் 100 பேரை இணைத்து இந்த சேவையை வழங்கும் வகையில், தனது தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

ப்ளூ ஜீன்ஸின் இந்த புதிய முயற்சி பற்றி அதன் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஸ்டூ ஆரான் கூறுகையில், “பயனர்களின் தொழில்நுட்பத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஒற்றை தொழில்நுட்பத்தின் மூலமாக அனைத்து வகையான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ப்ளூ ஜீன்ஸ் தனது சேவையை மேம்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த புதிய வசதியின் மூலம் ஏனைய வீடியோ கான்பரன்ஸிங் சேவையை வழங்கும் வலையமைப்புகளை விடவும் எதிர்காலத்தில் ப்ளூ ஜீன்ஸ் வெகுவாக பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.