Home India Elections 2014 543 நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது!

543 நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது!

635
0
SHARE
Ad

electionnபுதுடெல்லி, மே 16 – இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதல்கட்ட முடிவுகள் காலை 9.30-க்குள் வெளியாகும் என்றும், முழு முடிவுகளும் மாலை 4 மணிக்கு தெரியும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

electiஇந்தியாவின் 16-வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. 543 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்தியா முழுவதும் உள்ள 989 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன.