Home India Elections 2014 ஸ்டாலின் ராஜினாமா-வாபஸ் நாடகம் அரங்கேற்றம்! கேலிக் கூத்தான அரசியல்!

ஸ்டாலின் ராஜினாமா-வாபஸ் நாடகம் அரங்கேற்றம்! கேலிக் கூத்தான அரசியல்!

748
0
SHARE
Ad

alagiri stalinசென்னை, மே 18 : பொதுத் தேர்தலில் அடைந்த வரலாறு காணாத தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் வழக்கம்போல் ராஜினாமா நாடகம் ஒன்று அரங்கேறியுள்ளது.

முதலில் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கருணாநிதியிடம் ஸ்டாலின் கடிதம் அளித்திருக்கின்றார் என்ற செய்தி வெளியாகியது.

ஆனால், ஸ்டாலின் ராஜினாமா முடிவை ஏற்க திமுக தலைவர் கருணாநிதி மறுத்தார் என்றும் இதனையடுத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதவி விலகும் முடிவை திரும்பப் பெற்றார் என்றும் அடுத்தடுத்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

#TamilSchoolmychoice

ராஜினாமாவை வற்புறுத்தப் போவதில்லை என ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

ஸ்டாலின் சேவை, திமுக-வுக்கு தேவை என கருணாநிதி கூறியதாகவும் மனம் தளராமல் கட்சிக்கு பணியாற்றுமாறு தொண்டர்களை கருணாநிதி வலியுறுத்தியுள்ளார் என்றும் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார்.

இனியும் ராஜினாமா நாடகங்கள் எடுபடாது

stalinஇது போன்ற ராஜினாமா நாடகங்கள் இனியும் மக்களிடம் எடுபடாது – குறிப்பாக குடும்ப அரசியல் இனியும் இந்திய மக்களிடம் – அவர்கள்  எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எடுபடாது – என்ற செய்தியை மக்கள் இந்தப் பொதுத் தேர்தலின் வழி தெளிவாகத் தெரிவித்துள்ளார்கள்.

ராஜினாமா என்றால் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று உண்மையிலேயே ராஜினாமா செய்துவிட்டு ஒதுங்கிவிட வேண்டும்.

மகன் தந்தையிடம் ராஜினாமா கடிதம் தருவதும் – தந்தை அதை ஏற்காததும் இந்த நவீனயுக வாக்காளர்களை எந்தவிதத்திலும் ஈர்க்கப் போவதில்லை.

நாளை காங்கிரஸ் கட்சியிலும் அம்மா – மகன் இருவருக்கும் இடையிலும் இதே நாடகம்தான் அரங்கேறப் போகின்றது.

இந்திய வாக்காளர்களின் தெளிவான செய்தி – திறமைக்கு முதலிடம்

Narendra-Modiஇந்த தேர்தலில் இந்திய வாக்காளர்கள் – குறிப்பாக இளைய வாக்காளர்கள் – புதிய வாக்காளர்கள் ஒரு செய்தியை தெளிவாகப் பதிவு செய்துள்ளார்கள்.

கோடிக்கணக்கான மக்களைக்கொண்ட இந்தியாவில் யார் திறமைசாலி என்று நிரூபிக்கின்றார்களோ அவர்களுக்கே நாங்கள் மகுடம் சூட்டுவோம் என்ற செய்திதான் அது.

அதனால்தான், நரேந்திர மோடியின் குடும்பப் பின்னணி என்ன – அவர் யாருடைய மகன் – யார் அவருடைய மனைவி – என்பது போன்ற அம்சங்களையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்காமல் –

அவர் கடந்து வந்த பாதையில் அவர் குஜராத் முதல்வராக செய்த சாதனைகளை மட்டும் முன் நிறுத்தி அவருக்கு மிகப் பெரிய ஆதரவைத் தந்து – அவரை இன்று பிரதமராக புதுடில்லியில் அமர்த்தியிருக்கின்றார்கள்.

குடும்ப அரசியலுக்கு இந்தியாவில் இனி முற்றுப் புள்ளி

karunanithi111_28ஒரே குடும்பம்தான் –

அதில் உள்ள அண்ணன் தங்கைகள்தான் – அண்ணன் தம்பிகள்தான் – நாடாளத் தகுதியுள்ளவர்கள் என்பது போற்ற மாயத் தோற்றத்தை தூக்கிக் குப்பையில் எறிந்துள்ளார்கள் புதிய இந்தியாவின் எழுச்சி மிக்க வாக்காளர்கள்.

அதனால்தான், தமிழ் நாட்டில் திமுகவுக்கு பூஜ்யம் பரிசாகக் கிடைத்திருக்கின்றது.

அதனால்தான் காங்கிரசுக்கு அகில இந்திய அளவில் வெறும் 44 தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றது.

உத்தரப் பிரதேசத்தில் கூட அப்பா-மகன் அரசியலில் சிக்கித் தவிக்கும் சமஜ்வாடி கட்சிக்கு மரண அடி விழுந்திருக்கின்றது.

இந்த இந்தியப் பொதுத் தேர்தல் எடுத்துக் காட்டியிருக்கும் முக்கிய செய்தி கட்சிகளின் வழி குடும்ப அரசியல் என்பது இனியும் மக்களிடம் எடுபடாது என்பதுதான்.

எனவேதான்,

தேர்தல் முடிவுகள் வந்தவுடன், உடனடியாக, ஸ்டாலின் நடத்தியுள்ள ராஜினாமா நாடகம் –

அதனை அவரது தந்தை ஏற்றுக் கொள்ளாதது –

ஸ்டாலின் உடனே தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொள்ளாதது என எல்லாமே –

அதரப் பழசாக – நாடகத் தனமாக – கேலிக் கூத்தாக இருக்கின்றது என்பதுதான் உண்மை!