துப்பாக்கி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்திருக்கும் படம் கத்தி. இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது.
விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.
இவற்றில் ஒரு பாடலைத்தான் தனுஷ் எழுதப் போகிறார். இந்தப் பாடலை பாடப் போகிறவர் விஜய்.
விஜய்யின் பெரிய ரசிகராக தன்னைக் காட்டிக் கொள்பவர் தனுஷ். அதனால் இந்தப் பாடல் எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டதா என்றால், இல்லை. இசையமைப்பாளர் அனிருத், தனுஷின் கண்டுபிடிப்பல்லவா. அந்த நன்றி விசுவாசம்தான் தனுஷை பாடல் எழுத வைத்திருக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.