நியூயார்க், மே 24 – விண்வெளியில் ‘ஏலியன்ஸ்’ எனப்படும் வேற்று கிரகவாசிகளின் நடமாட்டம் இருகிறது என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்துள்ளது.
வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் அமெரிக்காவின் SETI துறை, அந்நாட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு சமர்பித்துள்ள ஆய்வு அறிக்கையில், “கடந்த 50 ஆண்டுகளாக வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சான்றுகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக மூத்த விண்வெளியாளர் சேத் சோஸ்டக் கூறுகையில், “வேற்று கிரக உயிரினங்கள் குறித்து சாதகமான விஷயங்கள் தெரிய வந்துள்ளது. அது தொடர்பான முழு உண்மைகளையும் அறிய சுமார் 20 வருடங்கள் ஆகும். எனினும், ஆய்வுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆராய்ச்சி நிறுவனம் அளித்துள்ள தகவல்கள் உண்மையானால், வேற்று கிரகவாசிகளுடனான தகவல் தொடர்பு வெகு தொலைவில் இல்லை.