ஸால்ஸ்பர்க் உம்ஜிபுங் – தொலைபேசிகளின் பயன்பாடு புழக்கத்தில் வந்து ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகள் தான் ஆகிகிறது. செல்பேசிகளைப் பொருத்தவரை, 1976-ம் ஆண்டு தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படி இருக்கையில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே செல்பேசிகள் புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அறிவியலுக்குப் புலப்படாத அமானுஷ்யங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரியாவின் ஸால்ஸ்பர்க் உம்ஜிபுங் மாவட்டத்தின் கிராமப் பகுதியில் களிமண்ணால் ஆன பழங்கால செல்பேசி ஒன்றை சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.
அந்தக் கருவியில் திரை, கீ போர்ட் என நவீன செல்பேசிகளின் அம்சங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் கீ போர்ட், சுமேரிய எழுத்துமுறையான கியூனிபார்ம் ஸ்கிரிப்டில் இருக்கிறதாம்.
இது இப்படி இருக்க, மற்றொரு சாரார் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கருவி, வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்த போது விட்டுச் சென்றதாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.