Home Featured தமிழ் நாடு நாஞ்சில் சம்பத் சிக்கிய அந்தக் காணொளி இதுதானோ?

நாஞ்சில் சம்பத் சிக்கிய அந்தக் காணொளி இதுதானோ?

520
0
SHARE
Ad

nanjil-sambathசென்னை – அதிமுகவின் கொள்கைப் பரப்புச் துணைச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், நேற்று மாலை திடீரென அந்தப் பதவியிலிருந்து அதிரடியாக விலக்கப்பட்டார். அவர் பதவி விலக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியான அதே சமயத்தில், அவர் பங்கேற்று இருந்த தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

தற்போது அந்தக் காணொளி ஊடகங்களில் வெளியாகி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா மக்களை சந்திப்பதில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சம்பத்தும், ‘அத்தி பூத்தார் போல் எப்போதாவது மக்களை சந்திக்கிறார் முதல்வர்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

மேலும் கூட்டணி பற்றி கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிடும் முன்னதாகவே, கூட்டணி குறித்து தனது கருத்துக்களை வெளியிட்டதும் அவரின் நீக்கத்திற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

அந்தக் காணொளியைக் கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=sgQ9bScamG4