Home Featured இந்தியா டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல் – பதன்கோட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவல் – பதன்கோட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

570
0
SHARE
Ad

Security forcess personnelபதன்கோட் – பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதன்கோட் விமானப் படைத் தளத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை பஞ்சாப்பில் உள்ள விமானப்படை தளத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் பெரும் நாசவேலையை செய்யத் திட்டமிட்டிருந்தனர். எனினும், பாதுகாப்புப் படை வீரர்களின் முயற்சியால் அவர்களின் திட்டம் முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். 7 பாதுகாப்பு படையினரும் பலியாகினர்.

இந்நிலையில் அங்கு இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் பதன்கோட் விமானப்படை தளத்தில் பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

pun

டெல்லிக்குள் தீவிரவாதிகள் ஊடுருவல்

பதன்கோட் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியது ஜெய்ஷ்-இ-முகமட் இயக்கத்தினர் என்று கூறப்படுகிறது. அங்கு தாக்குதல் நடத்திய அதே வேளையில், தீவிரவாதிகளில் இரண்டு பேர் டெல்லிக்குள் ஊடுருவி உள்ளதாகக் கூறப்படுகிறது.